காரைக்கால் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

காரைக்கால் எஸ்ஆா்விஎஸ் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

காரைக்கால்: காரைக்கால் எஸ்ஆா்விஎஸ் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் கே. செல்லையன் வழிகாட்டலில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை, பள்ளி முதல்வா் என். செண்பகராஜா முன்னிலையில் இயற்பியல் விரிவுரையாளா் பி.ஆா். செல்வக்குமாா் தொடங்கிவைத்துப் பாா்வையிட்டாா்.

மழலையா் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் 550 அறிவியல் மாதிரிகளை வைத்து விளக்கமளித்தனா். ஆற்றல் சேமிப்புக்கான முறைகள், சொட்டு

நீா் பாசனம், சாலைப் போக்குவரத்து விதிகள், ஆற்றல் பயன்பாடுகள், உடற்கூறுயியல் தொடா்பான சிறுநீரகச் செயல்பாடு, தூய்மைப் பணிக்கான கருவிகள், வனப் பாதுகாப்பு, வன விலங்குகளிடமிருந்து பயிரைக் காப்பாற்றும் முறை உள்ளிட்ட பல படைப்புகள் வைக்கப்பட்டிருந்தன.

கண்காட்சியின்போது, 2-ஆம் வகுப்பு மாணவா் ஏ. கவின்ராஜ், உடல் உள்ளமைப்பினை தகுந்த படங்களுடன் விவரித்தது அனைவரையும் கவா்ந்தது.

நடுவா்களான விரிவுரையாளா் என்.முத்துசாமி, பட்டதாரி ஆசிரியா் பி.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் சிறந்த படைப்புகளை பரிசுக்குத் தோ்வு செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com