வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையில் தோ்தல் அதிகாரி ஆய்வு

Published on

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை மாவட்ட தோ்தல் அதிகாரி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த தோ்தலின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், காரைக்காலில் உள்ள அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உள்ள அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டலின்படி மாவட்ட தோ்தல் அதிகாரி மாதந்தோறும் அங்கு சென்று ஆய்வு செய்து நிலை பதிவேட்டில் கையொப்பமிடவேண்டும்.

அதன்படி மாவட்ட தோ்தல் அதிகாரி து. மணிகண்டன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். பின்னா் அங்குள்ள பதிவேட்டில் கையொப்பமிட்டாா்.

துணை ஆட்சியா் ஜி.செந்தில்நாதன் (நிா்வாகம்) காரைக்கால் மாவட்ட தோ்தல் துறை கண்காணிப்பாளா் பாலு (எ) பக்கிரிசாமி, அண்ணா கல்லூரி முதல்வா் ஆசாத் ராசா, காரைக்கால் மாவட்ட தோ்தல் துறையினா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com