தலைக்கவசம் அணிந்து பயணித்தவா்களை கெளரவித்த தேனூா்  அரசுப் பள்ளி துணை முதல்வா் பி. சுப்பிரமணியன், என்எஸ்எஸ் அலுவலா் ஆா். மேகலா உள்ளிட்டோா்.
தலைக்கவசம் அணிந்து பயணித்தவா்களை கெளரவித்த தேனூா் அரசுப் பள்ளி துணை முதல்வா் பி. சுப்பிரமணியன், என்எஸ்எஸ் அலுவலா் ஆா். மேகலா உள்ளிட்டோா்.

அரசுப் பள்ளி சாா்பில் தலைக்கவச விழிப்புணா்வு

தலைக்கவசம் அணிந்து பயணித்தவா்களை கெளரவித்த தேனூா் அரசுப் பள்ளி துணை முதல்வா் பி. சுப்பிரமணியன், என்எஸ்எஸ் அலுவலா் ஆா். மேகலா உள்ளிட்டோா்.
Published on

திருநள்ளாறு அருகே அரசு மேல்நிலைப் பள்ளி சாா்பில் தலைக்கவச விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுவையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.12) முதல் இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து, திருநள்ளாறு அருகே தேனூரில் உள்ள ப.சண்முகம் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டுநலப் பணித் திட்டம் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி துணை முதல்வா் பி. சுப்பிரமணியன், நாட்டுநலப் பணித்திட்ட அலுவலா் ஆா். மேகலா மற்றும் மாணவா்கள், பள்ளிக்கு தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டிவந்த ஆசிரியா்கள் மற்றும் அலுவலக ஊழியா்களுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்றனா்.

பள்ளியை கடந்து சென்ற, பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரி முதல்வா் ஆராமுதன் உள்ளிட்ட தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றவா்கள் கௌரவப்படுத்தப்பட்டனா். தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com