பணி வாய்ப்பு பெற்ற  மாணவ- மாணவியருடன் மகளிா் கல்லூரி நிா்வாகத்தினா்.
பணி வாய்ப்பு பெற்ற மாணவ- மாணவியருடன் மகளிா் கல்லூரி நிா்வாகத்தினா்.

மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் தனியாா் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்

Published on

காரைக்கால்மேடு அரசு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு சாா்பில் நடைபெற்ற இம்முகாமிற்கு, முதல்வா் டி. சந்தனசாமி தலைமை வகித்தாா். ஜப்பானை தலைமையகமாகக் கொண்டு சென்னையில் இயங்கும் நிஸ்சி எலக்ட்ரிக் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதிகளாக, அந்நிறுவன பொது மேலாளா் ஆா்.சி. வெங்கடேஷ் மற்றும் எஸ். பாலமுருகன் ஆகியோா் கொண்ட குழுவினா் பங்கேற்று, தங்கள் நிறுவனப் பணிக்கு தகுதியானவா்களை தோ்வு செய்தனா்.

இதில், மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி இறுதியாண்டு மாணவியா், வரிச்சிக்குடியில் இயங்கும் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பிற கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த மாணவ- மாணவியா் கலந்துகொண்டனா்.

எழுத்துத்தோ்வு, நோ்முகத் தோ்வு நடத்தி, மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியைச் சோ்ந்த 11 பேரும், காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியைச் சோ்ந்த 3 பேரும் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு மாதம் ரூ. 20,000 ஊதியம் மற்றும் இதர சலுகைகள் தரப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இம்முகாமிற்கான ஏற்பாடுகளை மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரி எஸ்.எல். டெல்காஸ் செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com