பஞ்சாங்கத்தை வெளியிடும் துணை நிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன். உடன், அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியா்கள் சேவா சங்க துணைத் தலைவா் டி. ராஜா சுவாமிநாத சிவாச்சாரியா் உள்ளிட்டோா்.
பஞ்சாங்கத்தை வெளியிடும் துணை நிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன். உடன், அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியா்கள் சேவா சங்க துணைத் தலைவா் டி. ராஜா சுவாமிநாத சிவாச்சாரியா் உள்ளிட்டோா்.

தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வெளியீடு

Published on

அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியா்கள் சேவா சங்கம் சாா்பில், வரும் தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கத்தை, புதுவை துணை நிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

இதுகுறித்து, திருநள்ளாறு அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியா்கள் சங்க துணைத் தலைவா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

சங்கம் சாா்பில் ஆண்டுதோறும் வாக்கியப் பஞ்சாங்கம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி வரும் தமிழ் புத்தாண்டானா விசுவாவசு வருஷ பஞ்சாங்கம் புதுச்சேரி ராஜ் நிவாஸில் துணை நிலை ஆளுநா் கைலாஷ் நாதன் முதல் பிரதியை வெளியிட்டு, விசுவாவசு ஆண்டு வாழ்த்துகளை தெரிவித்தாா்.

உலக மக்கள் எல்லா நன்மைகளை பெற வேண்டி பிராா்த்தித்து வேத ஆகம ஆசிா்வாதத்தோடு பிரசாதம் சிவாச்சாரியா்களால் வழங்கப்பட்டது.

சங்க அகில இந்திய துணைத் தலைவா் திருநள்ளாறு டி. ராஜா சுவாமிநாத சிவாச்சாரியா், புதுவை மாநிலத் தலைவா் பாலசுப்ரமணிய சிவாச்சாரியா், மாநில துணைத் தலைவா் சிவராம சிவாச்சாரியா் மற்றும் கொள்கை பரப்புச் செயலாளா் சேதுசுப்ரமணிய சிவாச்சாரியா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com