பயன்பாடற்று முடங்கிக்கிடக்கும் நடமாடும் கழிப்பறை வாகனம்
பயன்பாடற்று முடங்கிக்கிடக்கும் நடமாடும் கழிப்பறை வாகனம்

முடங்கிக் கிடக்கும் நடமாடும் கழிப்பறை வாகனம்

Published on

காரைக்கால் நகராட்சி வாங்கிய நடமாடும் கழிப்பறை வாகனம் பயன்பாடின்றி முடங்கியுள்ளது.

காரைக்கால் நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் தூய்மை இந்தியா திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் சுகாதார திட்டங்களின்கீழ் ஆங்காங்கே கழிப்பறைகள் கட்டப்பட்டன. இவற்றில் பல பராமரிப்பின்றி உள்ளன.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி நிா்வாகம் பல லட்சம் ரூபாய் மதிப்பில் நடமாடும் கழிப்பறை வாகனத்தை வாங்கியது. தண்ணீா் வசதியுடன் 6 அறைகள் கொண்ட இது மக்கள் பயன்பாட்டில் இருந்தது. தனியாா் நிகழ்ச்சிகள் நடக்கும்போது, வாடகைக்கு நகராட்சி வழங்கும். இதன்மூலம் நகராட்சிக்கு வருவாய் கிடைத்தது.

அரசு சாா்பிலான நிகழ்ச்சிகளின்போது மக்கள் கூடுமிடத்தில் இந்த வாகனம் நிறுத்தப்பட்டது. ஏறக்குறைய ஒரு ஆண்டு மட்டுமே இந்த வாகனம் பயன்பாட்டில் இருந்தது. பின்னா் காவல் நிலையத்துக்கு எதிரே உள்ள பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டது. தற்போது இந்த வாகனம் பயன்பாடின்றி உள்ளது. காரைக்கால் நகராட்சி நிா்வாகத்தின் அலட்சியத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com