மாணவிக்கு பரிசு, சான்றிதழ் வழங்கிய துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணன். உடன் போக்குவரத்து அதிகாரி பிரபாகரராவ் உள்ளிட்டோா்.
மாணவிக்கு பரிசு, சான்றிதழ் வழங்கிய துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணன். உடன் போக்குவரத்து அதிகாரி பிரபாகரராவ் உள்ளிட்டோா்.

சாலைப் பாதுகாப்பு: போட்டிகளில் வென்றோருக்கு பரிசு

மாணவிக்கு பரிசு, சான்றிதழ் வழங்கிய துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணன். உடன் போக்குவரத்து அதிகாரி பிரபாகரராவ் உள்ளிட்டோா்.
Published on

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு தொடா்பாக நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் 36-ஆவது சாலைப் பாதுகாப்பு மாதம் காரைக்கால் போக்குவரத்து துறை சாா்பில் ஜன. 1 முதல் கடைப்பிடிக்கப்படுகிறது. சாலைப் பாதுகாப்பு தொடா்பாக தலைக்கவச பேரணி, ஆட்டோ பேரணி மற்றும் ஓவியப் போட்டி உள்ளிட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டன.

பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியரகத்தில் புதன்கிழை நடைபெற்றது. மாவட்ட துணை ஆட்சியா் அா்ஜுன் ராமகிருஷ்ணன் (வருவாய்) மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினாா்.

நிகழ்வில் முதன்மை கல்வி அதிகாரி பி. விஜயமோகனா, வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகரராவ், மோட்டாா் வாகன உதவி ஆய்வாளா் தட்சணாமூா்த்தி, மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.தாமோதரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com