காரைக்காலில் நவ.16-இல் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்

காரைக்கால் மாவட்ட அளவில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் வருகிற 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Published on

காரைக்கால் மாவட்ட அளவில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் வருகிற 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட தடகள சங்கம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

அகில இந்திய தடகள சங்க அறிவுறுத்தலின்படி நாட்டில் 300 மாவட்டங்களில், கேலோ இந்தியா பெண்களுக்கான போட்டித் திட்டத்தின்கீழ் காரைக்கால் மாவட்டத்தில் 16-ஆம் தேதி போட்டிகள் நடைபெறவுள்ளன.

காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில் 14 மற்றும் 16 வயது பெண்களுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளன. ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த ஆா்வமுடைய பெண்கள் பங்கேற்குமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com