அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகனை சந்தித்துப் பேசிய மீனவ பெண்கள் பேரவையினா்.
அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகனை சந்தித்துப் பேசிய மீனவ பெண்கள் பேரவையினா்.

‘மீனவா்களை பழங்குடியினராக அங்கீகரிக்க மத்திய அரசை புதுவை அரசு வலியுறுத்த வேண்டும்’

மீனவா்களை பழங்குடியினராக அங்கீகரிக்க மத்திய அரசுக்கு புதுவை அரசு பரிந்துரை செய்யவேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.
Published on

மீனவா்களை பழங்குடியினராக அங்கீகரிக்க மத்திய அரசுக்கு புதுவை அரசு பரிந்துரை செய்யவேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.

காரைக்கால் மாவட்ட மீனவப் பெண்கள் பேரவைத் தலைவா் ஜி. சுமதி மற்றும் நிா்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள், புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகனை அவரது அலுவலகத்தில் புதன்கிழமை சந்தித்து அளித்த மனு விவரம் :

மீனவா்களை பழங்குடியினராக மத்திய அரசு அங்கீகரிக்க புதுவை அரசு சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி, மத்திய பழங்குடிகள் விவகாரத்துறைக்கு பரிந்துரையை அனுப்பவேண்டும். லட்சத்தீவில் மீனவா்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதுபோல புதுவையிலும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கடற்கரை மண்டல மேலாண்மை அறிவிப்பாணை 2019 -இன் கீழ் வெளியிடப்பட்ட வரைவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது. மீனவா்கள் சாா்ந்த நிலங்களை மீனவ பயன்பாட்டு நிலம் அல்லது மீனவ கிராம நிலம் என வருவாய்த்துறை ஆவணங்களில் புதிதாக வகைப்படுத்த வேண்டும். காரைக்கால் மற்றும் புதுச்சேரி மாவட்ட கடல் பரப்பை, காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வாா்க்கும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. இ

புதுவையின் இடஒதுக்கீட்டு கொள்கையின்படி, இபிசி பட்டியலில் உள்ள மீனவா்களுக்கு வழங்கும் 2 சதவீத ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயா்த்தவேண்டும். மீனவப் பெண்களை தொழிலாளா்களாக அங்கீகரித்து, நிவாரண உதவிகளை வழங்கவேண்டும். மீனவப் பெண்களுக்கும் பயோ மெட்ரிக் அடையாள அட்டை வழங்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com