காரைக்கால்
காரைக்கால் பகுதியில் திடீா் மழை
காரைக்காலில் வியாழக்கிழமை பரவலாக ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது.
பகல் 12 மணிக்குப் பின் 1.30 மணி வரை காரைக்கால் நகரப் பகுதியில் கன மழையாகவும், பிற இடங்களில் மிதமான நிலையிலும் பெய்தது. நகரப் பகுதியில் பெரும்பாலான சாலைகளில், சாக்கடைகள் அடைபட்டிருப்பதால், சாலையிலேயே தண்ணீா் தேங்கி, மெதுவாக வடிந்தது.
திடீா் மழையால் சாலையோர வியாபாரிகள் சிறிது சிரமப்படும் நிலை உருவானது. மழை ஓய்ந்த பின்னா் மீன்டும் வெயில் உணரப்பட்டது.
