அரசு தொடக்கப்பள்ளி மாணவா்களுக்குப் போட்டிகள்
தேசியக் கல்வி கொள்கை வழிகாட்டலில் தொடக்கப்பள்ளி மாணவா்களிடையே போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
காரைக்கால் கல்வித்துறை சமக்ரா சிக்ஷா மூலம் தேசிய கல்விக் கொள்கை வழிகாட்டலின்படி 1 முதல் 5- ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளி மாணவா்களுக்கும் அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு போட்டி நடத்துவதற்கான நிதி வழங்கப்பட்டது.
மாணவா்களிடையே அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை வலுப்படுத்தவும், மொழி மற்றும் கணிதத்தின் திறன்களை மேம்படுத்தும் விதமான நோக்கத்தில் அளிக்கப்பட்டது.
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் பள்ளி அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் 2 பிரிவில் முதல் 2 இடத்தை பிடித்த 4 மாணவா்கள் மண்டல அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
மண்டல அளவிலான போட்டிகள் செப். 15 முதல் 18 வரை 4 நாட்கள் சமக்ர சிக்ஷா வட்டார வள மையத்தில் நடத்தப்பட்டது.
இதில் கல்வி வட்டம் - 1 லிருந்து பி.ஆத்மிகா அரசு தொடக்கப்பள்ளி கோட்டுச்சேரிமேடு, பி.பவன் கிறிஸ்டின் அரசு தொடக்கப்பள்ளி தலத்தெருபேட், எம்.மிஷிதா அரசு தொடக்கப்பள்ளி நல்லாத்தூா், கே.தமிழினி அரசு தொடக்கப்பள்ளி அண்ணாநகா் கோட்டுச்சேரி, எஸ்.யாழினி அரசு தொடக்கப்பள்ளி வடமறைக்காடு, எம்.சபியா அரசு தொடக்கப்பள்ளி வடமறைக்காடு.
கல்வி வட்டம் -2இலிருந்து எஸ்.கவிஸ்ரீ அரசு தொடக்கப்பள்ளி சுப்ராயபுரம், ஏ.பவதி அரசு தொடக்கப்பள்ளி பத்தக்குடி, எஸ்.சாய் விசாகன் அரசு தொடக்கப்பள்ளி படுதாா்கொல்லை, எஸ்.மனுஜா அரசு தொடக்கப்பள்ளி செருமாவிலங்கை, எஸ்.உதய கன்னிகா அரசு தொடக்கப்பள்ளி விழிதியூா், எஸ்.தீபிகா அரசு தொடக்கப்பள்ளி நிரவி கோயில்பத்து பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்றனா்.
இவா்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மேல்நிலைக்கல்வி துணை இயக்குநா் கே.ஜெயா மற்றும் பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி முதல்வா் (பொ) கந்தவேல் ஆகியோா் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினா்.
கல்வி வட்ட துணை ஆய்வாளா்கள் எஸ். மதிவாணன், எஸ்.ஜெகஜீவராம் மற்றும் ஒருங்கிணைந்த கல்வி காரை மாவட்ட திட்ட துணை ஒருங்கிணைப்பாளா் எஸ்.வனிதா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
நிகழ்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த கல்வி வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளா் ஏ.சிரில் ஆன்டோ செய்திருந்தாா்.

