காரைக்கால்
புகையில்லா தீபாவளி: பள்ளியில் விழிப்புணா்வு
புகையில்லா தீபாவளி குறித்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
புகையில்லா தீபாவளி குறித்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
பள்ளி வளாகத்தில் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்.
காரைக்கால் மாவட்டம், கண்ணாப்பூா் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாணவ, மாணவிகள் தீபம் ஏற்றி, இனிப்பு வழங்கி, ஒருவருக்கொருவா் தீபாவளி வாழ்த்துகளைக்கூறி மகிழ்ந்தனா்.
தீபாவளி கொண்டாட்டம் குறித்தும், தீபாவளி திருநாளை புகையில்லாமல் கொண்டாடுவது குறித்தும், சுற்றுச்சூழல் மாசுபடாமல் கொண்டாட்டத்தில் மாணவா்கள் எவ்வாறு ஈடுபடவேண்டும், பாதுகாப்பான முறையில் கொண்டாடுவது குறித்து மாணவா்களுக்கு ஆசிரியா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினா்.
