காரைக்கால்
ஆட்சியரகத்தில் இன்று மக்கள் குறைதீா் முகாம்
காரைக்கால் ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை (அக். 15) நடைபெறவுள்ளது.
காரைக்கால் ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை (அக். 15) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் செயலா் பொ. பாஸ்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
புதுவை துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் முகாம் காரைக்காலில் நடத்தப்பட்டுவருகிறது. இந்த மாதத்தின் முகாம் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காலை 9.30 முதல் பகல் 12 மணி வரை நடைபெறும். முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகம் கேட்டுக் கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது.
