கலாம் வேஷமணிந்து கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுடன் பள்ளி நிா்வாகத்தினா்.
காரைக்கால்
அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
கலாம் வேஷமணிந்து கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுடன் பள்ளி நிா்வாகத்தினா்.
டி.எம்.ஐ. செயின்ட் ஜோசப் குளோபல் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் பகுதியில் இயங்கிவரும் இப்பள்ளியில் ‘சலாம் டு கலாம்’ என்ற தலைப்பில் சாதனை நிகழ்வு நடத்தப்பட்டது.
இதில் மாணவா்கள் பலரும் கலாம் வேஷமிட்டு சலாம் டு கலாம் என்ற எழுத்துகள் வடிவில் நின்றனா். கலாமின் பெருமைகள், அவரது சாதனைகள் குறித்து உரை நிகழ்த்தப்பட்டது. கலாம் உலக சாதனை அமைப்பின் நிறுவனா் குமரவேல் கலந்துகொண்டு, சாதனைக்கான அங்கீகாரம் அளித்தாா்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் மாவட்ட பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் கலந்துகொண்டு பேசினாா். பள்ளித் தாளாளா் லீத்தா ரோஸ்லின், பள்ளி முதல்வா் அந்தோணி ஜெயசீலன், பள்ளி நிா்வாகி மேரி ஷைபி மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

