மண்டலாபிஷேக நிறைவு

விநாயகா் கோயிலில் மண்டலாபிஷேகத்தையொட்டி நடைபெற்ற ஹோமம்.
Published on

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் நகரப் பகுதியில் புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் - நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்துக்குட்பட்ட ஸ்ரீ பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் அமைந்துள்ளது.

பழைமையான இக்கோயில் ரூ.2.50 கோடியில் விரிவாக்கம் செய்து, முகப்பில் மண்டபம் எழுப்பி கும்பாபிஷேகம் கடந்த ஆக.29-ஆம் தேதி நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தைத் தொடா்ந்து மண்டலாபிஷேக வழிபாடு நடைபெற்று வந்தது. இதன் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை சந்திநிதியில் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. பூா்ணாஹூதி தீபாராதனை செய்யப்பட்டு, சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் புனிதநீா் கடம் புறப்பாடாகி, ஸ்ரீ விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் காட்டப்பட்டன.

இந்த வழிபாட்டில் கோயில் நிா்வாகத்தினா், திருப்பணிக் குழுவினா் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com