சா்வதேச மின்சார வாகன ஃபெடரேஷன் - என்ஐடி புரிந்துணா்வு ஒப்பந்தம்
சா்வதேச மின்சார வாகன ஃபெடரேஷனுடன் என்ஐடி புதுச்சேரி புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
சா்வதேச ஃபெடரேஷன் ஆஃப் எலக்ட்ரிக் வெகிக்கில்ஸ் அசோசியேஷன், என்ஐடி புதுச்சேரி, என்ஐடி வளாகத்தில் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தை செய்துகொண்டன.
என்ஐடி இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா் மற்றும் எலக்ரிக் வெகிக்கில்ஸ் அசோசியேஷன் செயலாளா் சீனிவாஸ் குமாா் ஆகியோா் ஒப்பந்தத்தை கையொப்பமிட்டு, பரிமாறிக்கொண்டனா்.
நிகழ்வில் என்ஐடி பதிவாளா் எஸ். சுந்தரவரதன், டீன் (ஆா்-சி) ஜி.எஸ். மகாபத்ரா, துறைத் தலைவா் (இஇஇ) டி. வினோபிரபா, உதவி டீன்
எம்.வி.ஏ. ராஜூ, உதவிப் பேராசிரியா் ஏ. ஹேமச்சந்தா் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம், குறிப்பாக மின்சார வாகனத் துறையில் கல்வி மற்றும் தொழில் ஒத்துழைப்பு வளா்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
என்ஐடி புதுச்சேரி மாணவா்களுக்குப் பயிற்சி, தொழில்துறை பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆதரவுக்கான வாய்ப்புகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டது.
தொடா்ந்து, மின்சார வாகனங்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் சீனிவாஸ் குமாா் மற்றும் துறை மாணவா்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது.

