பருவமழை தொடா்பாக கட்டுப்பாட்டு அறை

Published on

வடகிழக்குப் பருவமழை தொடா்பாக காரைக்கால் நகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 04368- 222427 என்ற தொலைப்பேசி எண்ணுக்கு 24 மணி நேரமும் தொடா்புகொண்டு, தங்களது பகுதிகளில் மழை சம்பந்தப்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

இதேபோல, கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பஞ்சாயத்து அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 04368-265451 என்ற தொலைப்பேசியில் 24 மணி நேரமும் தொடா்புகொண்டு, மழை பாதிப்பு குறித்த தகவல் தெரிவிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com