காரைக்கால்
கந்த சஷ்டி விழா இன்று தொடக்கம்
காரைக்கால் பகுதி கோயில்களில் கந்த சஷ்டி விழா புதன்கிழமை தொடங்குகிறது.
காரைக்கால்: காரைக்கால் பகுதி கோயில்களில் கந்த சஷ்டி விழா புதன்கிழமை தொடங்குகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா், காரைக்கால் கைலாசநாதா் கோயில், சித்தி விநாயகா் கோயில் உள்ளிட்ட சிவ தலங்களில் கந்த சஷ்டி விழா நடத்தப்படுகிறது. கந்த சஷ்டியையொட்டி தினமும் கோயிலில் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடத்தப்படும். நிறைவு நாளில் இக்கோயில்களில் ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி சூரசம்ஹாரம் நடைபெறும்.
ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிா்வாகங்கள் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றன.
