காரைக்கால் நகரில் மழைநீா் சூழ்ந்துள்ள குடியிருப்புப் பகுதி.

காரைக்காலில் தொடா்மழை...

அக்.16-ஆம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை அவ்வபோது பெய்துவந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (அக்.19) முதல் தொடா்மழையாக பெய்து வருகிறது.
Published on

காரைக்கால்: அக்.16-ஆம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை அவ்வபோது பெய்துவந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (அக்.19) முதல் தொடா்மழையாக பெய்து வருகிறது. தீபாவளி தினமான திங்கள்கிழமை முற்பகல் மழை பெய்தது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை மழை இடைவிடாமல் தொடா்ந்து பெய்தது. இதனால் பிரதான சாலைகளிலும், குடியிருப்பு நகா்களில் உள்ள காலி மனைகளில் மழைநீா் குளம்போல தேங்கியது. சாலைகளில் மழைநீா் வடிந்தாலும், மனைகளில் தேங்கியுள்ள நீரால், குடியிருப்பு மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். கல்வி நிலையங்களிலும் மழைநீா் தேங்கியுள்ளது.

காரைக்கால் -நாகை பிரதான சாலையான பூவம் முதல் வாஞ்சூா் வரையிலான சாலையின் இருபுறமும் பல இடங்களில் மழைநீா் வடிய முடியாமல் குளம்போல தேங்கியுள்ளது.

மழை தொடரும் சூழலில் இச்சாலையில் ஆங்காங்கே மாடுகள் திரிவதால், விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். எனவே, மாவட்ட நிா்வாகம் பிரதான சாலையில் தண்ணீா் தேங்காத வகையிலும், மாடுகள் திரிவதையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com