காரைக்கால் மீனவா்கள் கடலுக்கு செல்லத் தடை

மறு அறிவிப்பு வரும்வரை காரைக்கால் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
Published on

காரைக்கால்: மறு அறிவிப்பு வரும்வரை காரைக்கால் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் 21-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக கூறியுள்ளது. இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள விசைப் படகு, நாட்டுப் படகு மீனவா்கள் அக். 21 முதல் மறு அறிவிப்பு வெளியாகும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

மேலும், ஏற்கெனவே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவா்கள் உடனடியாக கரை திரும்ப, அந்தந்த மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள் ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com