காரைக்கால்
சிறையில் கைப்பேசி, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
காரைக்கால் கிளைச் சிறையில் கைதியிடம் இருந்து கைப்பேசி, புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காரைக்கால் கிளைச் சிறையில் கைதியிடம் இருந்து கைப்பேசி, புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காரைக்கால் கிளைச் சிறை துணை கண்காணிப்பாளா் பி. கோபிநாத், காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். கிளைச் சிறையின் காவலா்கள், கைதி அறைகளில் சோதனை நடத்தினா்.
அப்போது, திருநள்ளாற்றில் போக்ஸோ வழக்கில் விசாரணை கைதியாக இருக்கும் நந்தகுமாா் அறையின் கழிப்பறையில் ஒரு கைப்பேசி, கஞ்சா பொட்டலம், சிகரெட், சிகரெட் லைட்டா், 750 மி.லி அளவுள்ள மதுபாட்டில் இருந்தது.
இவை சிறையின் கழிவுநீா் வடிகால் வழியே சிறைக்குள் கொண்டுவரப்பட்டதாக நந்தகுமாா் விசாரணையின்போது தெரிவித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், சிறைக்கு சென்று விசாரணை நடத்தி, காரைக்கால் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தனா்.
