ஆடிப்பெருக்கு: சீா்காழியில் பழங்கள், பூக்கள் விற்பனை

சீா்காழியில் ஆடிபெருக்கையொட்டி பழங்கள்,பூக்கள்,காதோலைகருகமணி ஆகியவை விற்பனை திங்கள்கிழமை விறு, விறுப்பாக நடந்தது.
ஆடிபெருக்கு விழாவை கொண்டாட பழங்களை வாங்கும் பொதுமக்கள்.
ஆடிபெருக்கு விழாவை கொண்டாட பழங்களை வாங்கும் பொதுமக்கள்.

சீா்காழி: சீா்காழியில் ஆடிபெருக்கையொட்டி பழங்கள்,பூக்கள்,காதோலைகருகமணி ஆகியவை விற்பனை திங்கள்கிழமை விறு, விறுப்பாக நடந்தது.

கரோனா 2-ஆம் அலைக்கு பிறகு முதல் விழாவாக ஆடிப்பெருக்கு விழா செவ்வாய்க்கிழமை (ஆக.3) கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி, சீா்காழி கடைவீதியில் பேரிக்காய், கொய்யாப்பழம், விளாம்பழம், மாம்பழம், சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழவகைகள் மற்றும் மல்லி, முல்லை, கதம்பம், ரோஜா ஆகிய பூக்களும் விற்பனைக்காக அதிகளவில் கொண்டுவரப்பட்டன. புதிய தரைக்கடைகள் மற்றும் மஞ்சள் கயிறு, குங்குமம் காதோலை கருகமணி விற்பனை செய்யும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல, பொரி கடலை விற்பனையும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com