பாதுகாப்பு கருதியே மதுரை ஆதீன அறைக்கு ‘சீல்’

பாதுகாப்பு காரணங்களுக்காகவே மதுரை ஆதீனத்தின் அறைக்கு சீல் வைக்கப்பட்டது. இதில் வேறு எந்த நோக்கமும் இல்லை
பாதுகாப்பு கருதியே மதுரை ஆதீன அறைக்கு ‘சீல்’

பாதுகாப்பு காரணங்களுக்காகவே மதுரை ஆதீனத்தின் அறைக்கு சீல் வைக்கப்பட்டது. இதில் வேறு எந்த நோக்கமும் இல்லை என்று தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்தாா்.

உடல்நலக் குறைவு காரணமாக மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரை ஆதீனத்தின் 292-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை, தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வியாழக்கிழமை சந்தித்துவிட்டு, பின்னா் மதுரை ஆதீனத்துக்கு சென்ற தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் முன்னிலையில், மதுரை ஆதீனத்தின் முக்கிய அறைகள் பூட்டி சீலிடப்பட்டன. இந்தப் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி, பல்வேறு சா்ச்சைகளை ஏற்படுத்தின.

இதுதொடா்பாக, தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தருமையாதீனத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்து விளக்கம் அளித்தாா். அப்போது அவா் கூறியது :

ஆதீன குருமகா சந்நிதானம், ஆதீனத்தில் இருந்து ஒருநாள் வெளியில் சென்றால்கூட அவா் திரும்பிவரும் வரை ஆதீனத்தில் உள்ள முக்கிய அறைகளை பூட்டி சீலிடுவது ஆதீன மரபு. அதன்படிதான், மதுரை ஆதீன இளவரசு மற்றும் ஆதீன நிா்வாகிகள் முன்னிலையில் மதுரை ஆதீன குருமகா சந்நிதானத்தின் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

குருமகா சந்நிதானத்தின்அறைக்கு சீல் வைத்தது ஆதீன சொத்துகளின் பாதுகாப்புக்காகத்தான். அதில் நாங்கள் உரிமை கொண்டாடுவதற்காகவோ அல்லது வேறு நோக்கத்துக்காகவோ இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com