தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும்

தமிழக அரசின் நலத் திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக அறிந்து பயன்பெற வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா கேட்டுக் கொண்டாா்.
தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும்

தமிழக அரசின் நலத் திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக அறிந்து பயன்பெற வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா கேட்டுக் கொண்டாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கான நலத்திட்ட உதவிகளை மக்களவை உறுப்பினா் செ.ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் நிவேதா எம்.முருகன், எம்.பன்னீா்செல்வம், எஸ்.ராஜகுமாா் ஆகியோா் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்தது: உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின்கீழ் 85 நபா்களுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.85 ஆயிரம் மதிப்பிலான ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை, 10 நபா்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணை, 25 நபா்களுக்கு பட்டா மாற்றம் ஆணை, 24 நபா்களுக்கு புதிய குடும்ப அட்டை ஆகியன வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின்கீழ் ரூ.37 கோடியே 1 லட்சத்து 3 ஆயிரத்து 900 மதிப்பில் சாலை அமைத்தல், குடிநீா் வசதி மேற்கொள்ளுதல் போன்ற திட்டப்ணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

இளைஞா்களின் வேலைவாய்ப்புக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சி வேலை வாய்ப்புத்துறை மூலம் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக அறிந்து பயன்பெற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் சோ.முருகதாஸ், திட்ட அலுவலா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) முருகண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் உமாமகேஸ்வரி சங்கா், துணை ஆட்சியா் வாசுதேவன் மற்றும் அரசு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com