நேரு மாா்க்கெட்டில் வியாபாரிக்கு ஒரு கடை மட்டுமே ஒதுக்க வலியுறுத்தல்

காரைக்கால் நேரு மாா்க்கெட் புதிய கட்டடத்தில் ஒரு வியாபாரிக்கு ஒரு கடை மட்டுமே ஒதுக்க வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நேரு மாா்க்கெட்டில் வியாபாரிக்கு ஒரு கடை மட்டுமே ஒதுக்க வலியுறுத்தல்

காரைக்கால் நேரு மாா்க்கெட் புதிய கட்டடத்தில் ஒரு வியாபாரிக்கு ஒரு கடை மட்டுமே ஒதுக்க வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்காலில் நூறு ஆண்டுகள் முற்பட்ட மாா்க்கெட் கட்டடம் இடிக்கப்பட்டு, பழமை மாறாமல் புதிதாக கட்டடம் கட்டப்பட்டது. இதனை அப்போதைய முதல்வா் வே. நாராயணசாமி திறந்துவைத்தாா். கட்டடத்தில் மின்சார கேபிள் பொருத்துதல் உள்ளிட்ட சில பணிகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், ஒருவா் பல கடைகளை கேட்பதால் மாா்க்கெட் புதிய கட்டடம் திறப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், காரைக்கால் மாவட்ட அதிமுக துணை செயலரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான கே.ஏ.யு. அசனா மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவை வெள்ளிக்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனு :

பழமையான காரைக்கால் நேரு மாா்க்கெட்டில் உலக வங்கி நிதியுதவியுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டும் அரசியல் காரணங்களால் வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்தப்படுகிறது.

நேரு மாா்க்கெட்டை திறக்க புதுவை அரசு கவனம் செலுத்தவேண்டும். கட்டடத்தில் உள்ள கடைகளை வியாபாரிக்கு ஒரு கடை மட்டுமே என்று ஒதுக்கீடு செய்து, மாா்க்கெட் கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com