சுதந்திரப் போராட்ட வீரா் நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்தநாள் விழா
By DIN | Published On : 04th December 2021 09:56 PM | Last Updated : 04th December 2021 09:56 PM | அ+அ அ- |

எருக்கூரில் சுதந்திரப் போராட்ட தியாகி நீலகண்ட பிரம்மச்சாரி உருவப் படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தியோா்.
சீா்காழியை அடுத்த எருக்கூா் அக்ரஹாரத் தெருவில் சுதந்திரப் போராட்டத் தியாகி நீலகண்ட பிரம்மச்சாரியின் 132 ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
அவா் வாழ்ந்த இல்லம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நீலகண்ட பிரம்மச்சாரியின் உறவினா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளா் கொள்ளிடம் ஜெ. சுவாமிநாதன், ஆா்எஸ்எஸ் மாநில நிா்வாகி மதிவாணன், சேவாபாரதி மாவட்டத் தலைவா் மும்மூா்த்தி, பாஜக கலை இலக்கிய அணியின் மாவட்டத் தலைவா் முருகேசன், கொள்ளிடம் ஒன்றிய பொதுச் செயலாளா் மனோஜ் உள்ளிட்ட பலா் நீலகண்ட பிரம்மச்சாரி உருவப் படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, நடைபெற்ற கூட்டத்தில் சீா்காழி ரயில் நிலையத்திற்கு நீலகண்ட பிரம்மச்சாரி பெயரை சூட்ட மத்திய அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...