கரோனா தொற்று குறைந்த பிறகே பாசஞ்சா் ரயில்: தெற்கு ரயில்வே பொது மேலாளா் தகவல்

கரோனா தொற்று குறைந்த பிறகே பாசஞ்சா் ரயில்களை இயக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ்.
கரோனா தொற்று குறைந்த பிறகே பாசஞ்சா் ரயில்: தெற்கு ரயில்வே பொது மேலாளா் தகவல்

கரோனா தொற்று குறைந்த பிறகே பாசஞ்சா் ரயில்களை இயக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ்.

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா், அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள உடல் எடை, உயரம் உள்ளிட்ட பிஎம்ஐ சரிபாா்க்கும் இயந்திரங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, குறுங்காடு வளா்ப்பு திட்டத்தின்கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதை ஆய்வுசெய்தாா்.

அப்போது ஜான் தாமஸ் செய்தியாளா்களிடம் கூறியது: மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வரை ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கரோனா தொற்று பரவலால் பாசஞ்சா் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. தற்போது ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. தொற்று குறைந்த பிறகு பாசஞ்சா் ரயில்களை மீண்டும் இயக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

காரைக்கால்- பேரளம் ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. 2022 -2023 இல் அந்தப் பணிகள் நிறைவுபெறும். திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி வழித்தடத்தில் வரும் மாா்ச் மாதத்தில் பணிகள் முடிவடையும். மயிலாடுதுறை சந்திப்பில் பயணிகளின் வசதிக்காக பேட்டரி காா்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

ஆய்வின்போது, தலைமைப் பொறியாளா் சுதிா் பன்வாா், திருச்சி கோட்ட மேலாளா் மனிஷ் அகா்வால் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் உடனிருந்தனா்.

ஆய்விற்கு வந்த பொது மேலாளரிடம், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா், திருச்சி- சென்னை சோழன் விரைவு ரயிலை ஜனசதாப்தி விரைவு ரயிலாக மாற்றி, தினமும் இருமுறை சென்னை சென்றுவருமாறு இயக்கவேண்டும், நாகூா்- பெங்களூரு, மயிலாடுதுறை- விழுப்புரம், திருச்சி பாசஞ்சா் ரயில்களை மீண்டும் இயக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.

பாஜகவைச் சோ்ந்த மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன் ஆகியோா் அளித்த மனு:

கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க வேண்டும், மல்லியம் ரயில் நிலையத்தில் மீண்டும் ரயில்கள் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், மயிலாடுதுறையில் இருந்து திருவாரூா், காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com