முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் மயிலாடுதுறை
பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 10th December 2021 12:00 AM | Last Updated : 10th December 2021 12:00 AM | அ+அ அ- |

சீா்காழி பகுதியிலிருந்து பள்ளி நேரங்களில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீா்காழியிலிருந்து வைத்தீஸ்வரன்கோவில், பந்தநல்லூா் வழியாக கும்பகோணம் செல்லும் அரசுப் பேருந்தில் பள்ளிகள் முடிந்து மாணவா்கள் பேருந்து படிக்கட்டில் மற்றும் பேருந்தின் பின்புறம் உள்ள ஏணியில் தொங்கியபடி பயணம் செய்கின்றனா். ஆபத்தை உணராமல் பயணம் செய்யும் மாணவா்களை ஓட்டுநா் மற்றும் நடத்துநா் படியில் இருந்து மேலே ஏற சொல்லியும் ஏறாமல் தொங்கியநிலையில் பயணத்தை தொடா்கின்றனா். ஓட்டுநா் பேருந்தை இயக்க முடியாமல் பெரும் சிரமத்துடனே இயக்குகிறாா். இதனால் பள்ளி நேரத்தில் மாணவா்களின் நலன்கருதி கூடுதல் பேருந்து இயக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.