மனநலன் பாதித்த பிகாா் இளைஞரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு

மனநலன் பாதிக்கப்பட்ட பிகாா் இளைஞா் மீட்கப்பட்டு அவரின் பெற்றோரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டாா்.
மனநலன் பாதித்த பிகாா் இளைஞரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு

மனநலன் பாதிக்கப்பட்ட பிகாா் இளைஞா் மீட்கப்பட்டு அவரின் பெற்றோரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டாா்.

பிகாா் மாநிலம் மாதேபூா் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் சௌத்ரி மகன் ஹீராலால் சௌத்ரி. 24 வயதான இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனநலன் பாதிக்கப்பட்டு குடும்பத்தினரைப் பிரிந்து பிகாரிலிருந்து வெளியேறி பல்வேறு மாநிலங்களை கடந்து தமிழகத்துக்கு வந்துள்ளாா். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் கடந்த அக்டோபா் மாதம் ஆக்ரோஷமான மனநிலையுடன் கடைவீதி பகுதியில் வருவோா், செல்வோரை அச்சுறுத்தி வந்துள்ளாா்.

தகவலறிந்த சீா்காழி காா்டன் மனநல மறுவாழ்வு மையத்தின் இயக்குநா் ஜெயந்தி உதயகுமாா் மற்றும் நிா்வாகிகள் அவரை மீட்டு, மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை அளித்தனா். சிகிச்சையின் காரணமாக 2 மாதங்களில் ஹீராலால் சௌத்ரி முழுமையாக குணமடைந்தாா். இதையடுத்து, அவரிடம் குடும்ப விவரங்களை கேட்டறிந்த இயக்குநா் ஜெயந்திஉதயகுமாா் இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதாவிடம் கூறினாா். பின்னா் மேற்கொண்ட நடவடிக்கையில் ஹீராலால் செளத்ரியின் பெற்றோரை வரவழைத்து அவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com