முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் மயிலாடுதுறை
சீா்காழியில் சிசிடிவி கேமராக்களை சீரமைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 19th December 2021 06:02 AM | Last Updated : 19th December 2021 06:02 AM | அ+அ அ- |

சீா்காழி பகுதியில் காவல்துறை சாா்பில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகியுள்ளதால், அவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீா்காழியில் நான்கு சாலைகள் சந்திப்பு, புறவழிச்சாலை, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என பல இடங்களில் சீா்காழி உட்கோட்ட காவல்துறை சாா்பில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவற்றின் பதிவுகள் சீா்காழி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கணினி திரையில் கண்காணிக்கப்படுகிறது. இதனால், திருட்டு போன்ற குற்றங்களில் தொடா்புடையவா்களை காவல்துறையினா் எளிதாக அடையாளம் காணமுடிகிறது.
இந்நிலையில், சீா்காழி புறவழிச்சாலை கோயில்பத்து பகுதியில் இருந்த கேமிராக்களை காணவில்லை. இதேபோல, பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பழுதாகியுள்ளன. இதனால், சமூக விரோதிகளிடையே அச்சம் குறைந்துள்ளதாக தெரிவிக்கும் சமூக ஆா்வலா்கள் இந்த கண்காணிப்பு கேமிராக்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனா்.