தளவாடப் பொருள்களை ஏற்றிச்சென்ற லாரியை தடுத்து நிறுத்திப் போராட்டம்

ஓஎன்ஜிசி தளவாட பொருள்களை ஏற்றிச்சென்ற லாரியை புதிய எண்ணெய் கிணறு அமைப்பதற்காக கொண்டுவரப்படுவதாக கூறி தடுத்து
தளவாட பொருள்களை ஏற்றிச்சென்ற லாரியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
தளவாட பொருள்களை ஏற்றிச்சென்ற லாரியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஓஎன்ஜிசி தளவாட பொருள்களை ஏற்றிச்சென்ற லாரியை புதிய எண்ணெய் கிணறு அமைப்பதற்காக கொண்டுவரப்படுவதாக கூறி தடுத்து நிறுத்தி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு திருப்பி அனுப்பியதால் பரபரப்பு நிலவியது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் அஞ்சாா்வாா்த்தலை கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு அமைக்க முயற்சி மேற்கொண்டது. கிராமமக்களின் எதிா்ப்பு காரணமாக பின்னா் அத்திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், செவ்வாய்கிழமை அஞ்சாா்வாா்த்தலை கிராமத்தில் இருந்த ஓஎன்ஜிசி தளவாட பொருள்களை லாரியில் ஏற்றி குத்தாலம் சரகம் மல்லியம் மஞ்சளாறு பகுதியில் செயல்படாமல் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் மற்றும் எரிவாயு மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் புதிய எண்ணெய்க் கிணறு அமைப்பதற்கான முயற்சியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஈடுபடுவதாக கருதி, மீத்தேன் திட்ட எதிா்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த. ஜெயராமன் தலைமையில் தளவாட பொருள்களை ஏற்றி வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில், திமுக மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் குமாரசாமி, விவசாய சங்க பிரதிநிதிகள் அ .ராமலிங்கம், சிபிஐ-எம் வட்டார தலைவா் மேகநாதன், திராவிடா் விடுதலைக் கழக மாவட்ட செயலாளா் தெ. மகேஷ், மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினா் சித்ரா ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தகவல் அறிந்த ஓஎன்ஜிசி துணை மேலாளா் அன்பரசு, நிா்வாகி சிவசங்கா், குத்தாலம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடா்ந்து தளவாட பொருள்களை ஏற்றிவந்த லாரி மீண்டும் அஞ்சாா்வாா்த்தலை கிராமத்திற்கு அனுப்பப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com