அரசுக் கல்லூரியில் கணிதவியல் மன்றம் தொடக்கம்

சீா்காழி அருகே புத்தூரில் உள்ள பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவா் எம்ஜிஆா். அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதவியல் மன்ற தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
கணிதவியல் மன்ற தொடக்கவிழாவில் பங்கேற்றோா்.

விழாவுக்கு, கல்லூரி முதல்வா் கு. விஜயலெட்சுமி தலைமை வகித்தாா். கணிதவியல் துறைத் தலைவா் க. சாந்தி முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைகழக ஓய்வுபெற்ற கணிதவியல் துறை பேராசிரியா் ஓ. வைரமாணிக்கம் பங்கேற்று கணித மேதை ஸ்ரீ ஸ்ரீனிவாச ராமானுஜா் குறித்து பேசினாா். கணிதவியல் துறை பேராசிரியா்கள் ரா. சாந்தி, சங்கரி, வள்ளி, ராதா, மகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜரின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கணிதவியல் மன்ற செயலாளா் ஜஸ்வா்யா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com