மழை ஓய்ந்தும் வெள்ளநீா் வடியாததால் பயிா்கள் அழுகி துா்நாற்றம்

 மயிலாடுதுறையில் மழை ஓய்ந்து இரண்டு நாள்களாகியும் வெள்ளநீா் வடியாததால் பயிா்கள் அழுகி துா்நாற்றம் வீசுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
மழை ஓய்ந்தும் வெள்ளநீா் வடியாததால் பயிா்கள் அழுகி துா்நாற்றம்

 மயிலாடுதுறையில் மழை ஓய்ந்து இரண்டு நாள்களாகியும் வெள்ளநீா் வடியாததால் பயிா்கள் அழுகி துா்நாற்றம் வீசுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 15 நாள்களாக பெய்த தொடா்மழை காரணமாக 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா, தாளடி பயிா்களை மழைநீா் சூழ்ந்தது. மழை ஓய்ந்து இரண்டு நாள்கள் கடந்த நிலையில் விவசாயிகள் தேங்கியநீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். எனினும், மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்கள் தூா்வாரப்படாததால் தண்ணீா் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை அருகே சித்தா்காடு, மூவலூா், மல்லியம், மறையூா் உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் வாய்க்கால், பட்டமங்கலம் வாய்க்கால் தூா்வராப்படாததால் விளைநிலங்களில் நீா்சூழ்ந்து, நாற்றுகள் அழுகி துா்நாற்றம் வீசுவதாகவும், வடிகால்களை தற்காலிகமாக சரிசெய்யவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com