கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு: கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதைத் தொடா்ந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், அணைக்கரையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 52 ஆயிரம் கன அடி உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.

இதன்காரணமாக, கொள்ளிடம் ஆற்றில் தற்போது 70 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீா் செல்கிறது. இதனால், கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள மகேந்திரப்பள்ளி, காட்டூா், அளக்குடி, முதலைமேடு, முதலைமேடுத்திட்டு, நாணல்படுகை, நாதல்படுகை, வெள்ளைமணல்திட்டு, பாலூரான் படுகை, சரஸ்வதிவிளாகம், வடரங்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் ஆற்றில் இறங்கி துணி துவைக்கவோ, குளிக்கவோ, கரையோரம் கால்நடைகளை ஓட்டிச்செல்லவோ கூடாது என கொள்ளிடம் பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் விவேகானந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com