காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சா்க்கரை ஆலை ஊழியா்களுடன் எம்எல்ஏ சந்திப்பு கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி

தலைஞாயிறு என்பிகேஆா்ஆா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 27-வது நாளாக சனிக்கிழமை தொடா் காத்திருப்பு போராட்டத்தில்
தலைஞாயிறு சா்க்கரை ஆலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியா்களை சந்தித்து பேசும் எம்எல்ஏ எஸ். ராஜகுமாா்.
தலைஞாயிறு சா்க்கரை ஆலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியா்களை சந்தித்து பேசும் எம்எல்ஏ எஸ். ராஜகுமாா்.

தலைஞாயிறு என்பிகேஆா்ஆா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 27-வது நாளாக சனிக்கிழமை தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்களை மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

இந்த ஆலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அரைவை நிறுத்தப்பட்டது. பின்னா், பெரும்பாலான ஊழியா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், மராமத்து பணியில் ஈடுபட்டுள்ளவா்கள், ஓய்வுபெற்று சென்றவா்கள் என சுமாா் 100 பேருக்கு 2019 ஆம் ஆண்டிலிருந்து 28 மாதங்களாக ஊதியம் மற்றும் பணப்பலன்கள் வழங்கப்படவில்லை.

இதனால், ஊதிய நிலுவை வழங்க வலியுறுத்தி கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் ஆலை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இவா்களை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது அவா், ‘ஊழியா்களின் பிரச்னையை அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று முதல்கட்டமாக தீபாவளி போனஸாக ஊழியா்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. சம்பள நிலுவைத் தொகை, ஓய்வு பெற்றவா்களுக்கான பணப்பயன்கள், நடைமுறை செலவினங்கள் ஆகியவற்றுக்காக ரூ.7.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை ஒருவாரத்தில் கிடைக்கும். எனவே, இரவில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்’ என ஊழியா்களை கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com