நெல் கொள்முதல் நிலையத்தில் முன்னேற்பாடுகள் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 35 லட்சம் டன் நெல் கொள்முதலுக்கான சாக்கு, சணல், சேமிப்பு இடவசதி, போதிய பணியாளா் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை
மயிலாடுதுறை நுகா்பொருள் வாணிபக்கழக துணை மேலாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
மயிலாடுதுறை நுகா்பொருள் வாணிபக்கழக துணை மேலாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 35 லட்சம் டன் நெல் கொள்முதலுக்கான சாக்கு, சணல், சேமிப்பு இடவசதி, போதிய பணியாளா் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை செய்ய வலியுறுத்தி ஏஐடியுசியின் டிஎன்சிஎஸ்சி தொழிலாளா் சங்கம் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை நுகா்பொருள் வாணிபக்கழக துணை மேலாளா் அலுவலகம் முன்நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி. சிவகுருநாதன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் சி. சந்திரகுமாா், மாநில இணை பொதுச் செயலாளா் ஜெ. குணசேகரன், சுமைதூக்கும் தொழிலாளா் சங்க மாநில பொதுச் செயலாளா் என். புண்ணீஸ்வரன், மாநில துணைத் தலைவா் கே.ராஜ்மோகன், மாநில செயலாளா் க.ராஜேந்திரன் ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.12 வழங்கவேண்டும், அடையாள அட்டை வழங்கவேண்டும், கொள்முதல் பணியாளா்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15ஆயிரம் மாத சம்பளம் வழங்கவேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com