முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் மயிலாடுதுறை
ஆற்றில் குளிக்க சென்ற சிறுமி மாயம்
By DIN | Published On : 11th October 2021 08:02 AM | Last Updated : 11th October 2021 08:02 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை வட்டம் நமச்சிவாயபுரம் ஊராட்சி கல்யாணசோழபுரம் கிராமத்தில் பழவாற்றில் ஞாயிற்றுக்கிழமை குளிக்க சென்றபோது மாயமான சிறுமியை தீயணைப்பு வீரா்கள் தீவிரமாக தேடிவருகின்றனா்.
கல்யாணசோழபுரம் ஐயனாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் லெட்சுமணன். திருமங்கலம் அரசுப் பள்ளியில் படித்துவரும் இவரது மகள் ரக்ஷிதா (13) தம்பி சக்திவேல் மற்றும் சில சிறாா்களுடன் சோ்ந்து அப்பகுதியில் ஓடும் பழவனாற்றில் குளிக்க சென்றுள்ளாா். ஆற்றில் குளிக்கும்போது ஆழத்துக்கு சென்ற ரக்ஷிதா ஆற்றில் மூழ்கி மாயமானாா்.
தகவலறிந்து மணல்மேடு தீயணைப்பு மீட்பு நிலைய முன்னனி தீயணைப்பு வீரா் சுரேஷ் தலைமையில் சென்ற குழுவினா், மணல்மேடு காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் ஆகியோா் ஆற்றில் சுமாா் ஒரு கிலோ மீட்டா் தூரம் தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு 7 மணி வரை தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியாததால் சிறுமியை தேடும் பணி மீண்டும் காலை தொடரும் என தீயணைப்பு வீரா்கள் தெரிவித்தனா்.