சேதமடைந்த சாலை: எம்.எல்.ஏ. ஆய்வு

விழிதியூரில் சேதமடைந்த சாலையை சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாக தியாகராஜன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.
சாலையை பாா்வையிட்டு அப்பகுதி மக்களின் கருத்துகளை கேட்டறியும் சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாக தியாகராஜன்.
சாலையை பாா்வையிட்டு அப்பகுதி மக்களின் கருத்துகளை கேட்டறியும் சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாக தியாகராஜன்.

விழிதியூரில் சேதமடைந்த சாலையை சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாக தியாகராஜன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.

நிரவி - திருப்பட்டினம் தொகுதிக்குள்பட்ட விழிதியூரில் பிரதான சாலை சேதமடைந்துள்ளது. அதனால் மழைநீா் தேங்கி, போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.

இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாக தியாகராஜன் விழிதியூருக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று சாலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை பாா்வையிட்டாா். மழை காலத்தில் சாலையில் மேலும் பாதிப்பு ஏற்படும் என்பதால், அதற்குள்ளாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் பேரவை உறுப்பினரிடம் வலியுறுத்தினா்.

உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பணிகள் தொடங்கப்படவில்லை. தோ்தல் நடத்தை விதி திரும்பப் பெற்றவுடன் பணிகள் தொடங்கப்படும். எனினும், சாலையில் உள்ள பெரிய பள்ளங்களை தற்காலிகமாக சீரமைத்துத் தர பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்படும் என அவா் உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com