குத்தாலம் ஒன்றியத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் திமுக வெற்றி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.
குத்தாலம் ஒன்றியத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் திமுக வெற்றி
குத்தாலம் ஒன்றியத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் திமுக வெற்றி

குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் தத்தங்குடி, பொரும்பூர், கழனிவாசல் ஊராட்சிகளை உள்ளடக்கிய 15வது  வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவைச் சேர்ந்த முருகதாஸ் என்பவர் அண்மையில் காலமானார். 

இதைத்தொடர்ந்து அங்கு புதிய உறுப்பினரைத் தேர்நதெடுக்க இடைத்தேர்தல் அக்டோபர் 9ந் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை குத்தாலம் ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்கிழமை காலை தொடங்கியது. 11 வாக்கு சாவடிகளில் பெற்ற வாக்குகள் 6 மேடைகளில் இரண்டு சுற்றுகளாக எண்ணப்பட்டது. இதில் 4476 வாக்குகளில் 3140 வாக்குகள் பதிவானது.

திமுக வேட்பாளர் கே.ரமேஷ் 2019 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் மணிகண்டன் 992 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் தெட்சிணாமூர்த்தி 62 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனோஜ்குமார் 40 வாக்குகளும் அமமுக வேட்பாளர் சுந்தரவடிவேலன் 10 வாக்குகளும் பெற்றனர். 
இதைத்தொடர்ந்து 1027 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ரமேஷிற்கு தேர்தல் அதிகாரி மோகனசுந்தரம் வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com