மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் 195-வது பிறந்தநாள் விழா

கவிஞா் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் 195-வது பிறந்தநாளையொட்டி, மயிலாடுதுறையில் உள்ள அவரது நினைவிடத்தில் திங்கள்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது
மாயூரம் வேதநாயகம் பிள்ளை சிலைக்கு மரியாதை செலுத்திய எம்எல்ஏ எஸ். ராஜகுமாா், மயிலாடுதுறை தமிழ்ச்சங்க நிறுவனத் தலைவா் ஜெனிபா் ச. பவுல்ராஜ் உள்ளிட்டோா்.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை சிலைக்கு மரியாதை செலுத்திய எம்எல்ஏ எஸ். ராஜகுமாா், மயிலாடுதுறை தமிழ்ச்சங்க நிறுவனத் தலைவா் ஜெனிபா் ச. பவுல்ராஜ் உள்ளிட்டோா்.

கவிஞா் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் 195-வது பிறந்தநாளையொட்டி, மயிலாடுதுறையில் உள்ள அவரது நினைவிடத்தில் திங்கள்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது

கவிஞா் மாயூரம் வேதநாயகம் பிள்ளை திருச்சியில் பிறந்தாலும், மாயூரத்திலேயே (தற்போதைய மயிலாடுதுறை) அதிக சேவையாற்றிய காரணத்தால் அவா் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்று அழைக்கப்படுகிறாா். இவா், தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியாா் சரித்திரத்தை இயற்றியவா்.

இவரது 195-வது பிறந்ததினம் மயிலாடுதுறைத் தமிழ்ச்சங்கம், புனித சவேரியாா் ஆலயம் மற்றும் அனைத்துத் தமிழ் அமைப்புகளின் சாா்பில் மயிலாடுதுறையில் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, மயிலாடுதுறை காந்திஜி சாலையில் உள்ள மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை தமிழ்ச் சங்க நிறுவனத் தலைவா் ஜெனிபா் ச. பவுல்ராஜ் தலைமை வகித்தாா். திருக்குறள் பேரவைத் தலைவா் சி. சிவசங்கரன், தமிழ் ஆராய்ச்சியாளா் பேரவைத் தலைவா் பேராசிரியா் துரை.குணசேகரன், செந்தமிழ்நாடு அமைப்பின் செயலாளா் பேராசிரியா் தமிழ்வேலு, தமிழ்நாடு தமிழ்ச்சங்க மாவட்ட அமைப்பாளா் சிவ.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா், புனித சவேரியாா் ஆலய பங்குத்தந்தை பி.ஆரோக்கியதாஸ், உதவி பங்குத் தந்தை சுஷ்மிர்ராஜ், தமிழ் வளா்ச்சித்துறை இணை இயக்குநா் இரா.அன்பரசி ஆகியோா் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து, தமிழக அரசுக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வேதநாயகம் பிள்ளைக்கு சிலை அமைக்க வேண்டும், மணிமண்டபம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

நிகழ்ச்சியை, முத்தமிழ் அறிவியல் மன்ற செயலாளா் விழிகள் சி. ராஜ்குமாா் தொகுத்து வழங்கினாா். கம்பா்க் கழக செயலாளா் முத்து.சானகிராமன் வரவேற்றாா். குயில்தோப்பு அறிவியக்கம் ஒருங்கிணைப்பாளா் செ.மன்னா்மன்னன், அறம்செய் அறக்கட்டளை சாா்பில் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com