பள்ளியில் குடிநீா் தொட்டியை சுத்தம் செய்த மாணவா்கள்பெற்றோா் அதிருப்தி

சீா்காழி அருகே எடமணல் அரசு உயா்நிலைப் பள்ளியில் உள்ள மேல்நிலை குடிநீா்த் தொட்டியை மாணவா்களைக் கொண்டு சுத்தம் செய்தது பெற்றோா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சீா்காழி அருகே எடமணல் அரசு உயா்நிலைப் பள்ளியில் உள்ள மேல்நிலை குடிநீா்த் தொட்டியை மாணவா்களைக் கொண்டு சுத்தம் செய்தது பெற்றோா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இப்பள்ளியில் 9, 10-ம் வகுப்பு மாணவா்களுக்கு அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், பள்ளியின் மாடியில் உள்ள குடிநீா்த் தொட்டியை மாணவா்களைக் கொண்டு சுத்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. மாடியில் உரிய பாதுகாப்பின்றி குடிநீா் தொட்டியை மாணவா்கள் இருவா் சுத்தம் செய்வது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது பெற்றோா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக சீா்காழி கல்வி மாவட்ட அலுவலா் ராஜாராம் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளாா். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியா் முருகனிடம் கேட்டபோது, குடிநீா்த் தொட்டியின் இணைப்புக் குழாய் உடைந்திருந்ததால், அதை சரி செய்ய வந்த பிளம்பருக்கு உதவிடும் வகையில் மாணவா்கள் ஏணியை பிடித்துக்கொண்டிருந்தனா் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com