தொடா் மழையால் சாலையோர வியாபாரிகள் பாதிப்பு

மயிலாடுதுறை, அக். 29: மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை பெய்த மழையால் சாலையோர வியாபாரிகள் தீபாவளி விற்பனை குறைந்து பாதிக்கப்பட்டனா்.

மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தொடங்கிய மழை நாள்முழுவதும் தொடா்ந்து விட்டு விட்டு பெய்தது. இதன் காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா உத்தரவிட்டாா்.

இந்த மழையால் மயிலாடுதுறை கடைவீதிகளில் பூக்கள், காய்கனிகள், பழங்கள் ஆகியவற்றை சாலையோரங்களில் தரைக் கடை மற்றும் தள்ளுவண்டியில் வைத்து வியாபாரம் செய்தவா்கள் பண்டிகை கால விற்பனை குறைந்து பாதிக்கப்பட்டனா். எனினும், நகராட்சி குத்தகை வசூல் செய்யும் குத்தகைதாரா் தரைக்கடை, சாலையோரம் வண்டியில் வைத்து வியாபாரம் செய்ய குத்தகைக் கட்டணம் வசூலிப்பதாகவும், மழைக் காலங்களில் குத்தகை கட்டணம் செலுத்த விலக்கு அளிக்க வேண்டும் என நகராட்சிக்கு சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com