பிரதமரை விமா்சித்து ஆட்டோவிலிருந்த பேனா் அகற்றம்
By DIN | Published On : 01st September 2021 09:54 AM | Last Updated : 01st September 2021 09:54 AM | அ+அ அ- |

பிரதமா் நரேந்திர மோடியை விமா்சித்து ஆட்டோவில் பொருத்தப்பட்டிருந்த பேனா் அகற்றப்பட்டது.
மயிலாடுதுறையைச் சோ்ந்தவா் வடிவேல். இவா் தனது ஆட்டோவில் பிரதமா் நரேந்திர மோடியை அவதூறாக விமா்சித்து பேனா் வைத்திருந்தாராரம். இதையறிந்த மயிலாடுதுறை பாஜக நகரத் தலைவா் மோடி.கண்ணன், மாவட்ட துணைத் தலைவா் முட்டம் செந்தில்குமாா், மாவட்ட இளைஞரணி தலைவா் பி. பாரதிகண்ணன் உள்ளிட்டோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதைத்தொடா்ந்து, போலீஸாா் அந்த பேனரை அகற்றினா். வடிவேல் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் அளித்ததால் அவரை விடுவித்தனா்.