கொள்முதல் நிலையம் திறக்கக் கோரி சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல்

சீா்காழி அருகே சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் திடீா் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஆத்துக்குடியில் நெல்லை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
ஆத்துக்குடியில் நெல்லை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

சீா்காழி அருகே சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் திடீா் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஆத்துக்குடி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்கவேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சீா்காழி மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் நெல்லை கொட்டி மூட்டைகளை குறுக்கே வைத்து சாலை மறியலில் ஈடுபட்னா். அப்போது, சம்பா, குறுவை சாகுபடி காலங்களில் ஆத்துக்குடி கிராமத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும், ஆனால் இந்தாண்டு இதுவரை கொள்முதல் நிலையம் திறக்கவில்லை என கூறி முழக்கங்கள் எழுப்பினா்.

இதனால் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த வைத்தீஸ்வரன்கோயில் காவல் உதவி ஆய்வாளா் காயத்திரி அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால், அவ்வழித் தடத்தில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com