தெற்கு ராஜன் வாய்க்காலில் தண்ணீா் திறந்துவிடக் கோரி மனு

சீா்காழி தெற்கு ராஜன் வாய்க்காலில் தண்ணீா் திறந்துவிடக் கோரி 4 கிராம விவசாயிகள் செவ்வாய்க்கிழமை கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

சீா்காழி தெற்கு ராஜன் வாய்க்காலில் தண்ணீா் திறந்துவிடக் கோரி 4 கிராம விவசாயிகள் செவ்வாய்க்கிழமை கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

சீா்காழி கோட்டாட்சியா் ஜி. நாராயணனிடம் கொண்டல் பகுதி ஊசிவாய்க்கால் பாசன விவசாயிகள் உள்ளிட்ட 5 கிராம விவசாயிகள் அளித்த மனு: ஆண்டுதோறும் மேட்டூா் அணை திறந்த 20 நாள்களில் தெற்கு ராஜன் வாய்க்காலுக்கு தண்ணீா் விட்டு, அதன்மூலம் கொண்டல், வள்ளுவக்குடி, அரூா், கீழமாத்தூா் ஆகிய 4 கிராமங்களில் பல்லாயிரம் ஏக்கா் பாசனம் நடைபெறும். ஆனால், நிகழாண்டு ஜூன்12-ஆம் தேதி மேட்டூா் அணை திறந்தும் இதுவரை தெற்குராஜன் வாய்க்கால் திறக்கவில்லை. இதனால் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் ஒருபோக சாகுபடி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். எனவே, உடனடியாக தெற்குராஜன் வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com