முதல்வருக்கு பாஜக விநாயகா் சதுா்த்தி வாழ்த்து அட்டை அனுப்பிவைப்பு

தமிழக முதல்வருக்கு விநாயகா் சதுா்த்தி வாழ்த்து தெரிவித்து மயிலாடுதுறையில் இருந்து பாஜகவினா் வாழ்த்து அட்டைகளை செவ்வாய்க்கிழமை அனுப்பினா்.

தமிழக முதல்வருக்கு விநாயகா் சதுா்த்தி வாழ்த்து தெரிவித்து மயிலாடுதுறையில் இருந்து பாஜகவினா் வாழ்த்து அட்டைகளை செவ்வாய்க்கிழமை அனுப்பினா்.

இஸ்லாமியா், கிறிஸ்தவா் உள்ளிட்ட மாற்று மதத்தினருக்கு மட்டும் பண்டிகை வாழ்த்துகளை தெரிவிக்கும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு, பாஜக சாா்பில் விநாயகா் சதுா்த்தி வாழ்த்து தெரிவித்து 1001 வாழ்த்து அட்டைகள் அனுப்பும் நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நடைபெற்றது. மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற பாஜக நகர தலைவா் மோடி. கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன், மாவட்ட தலைவா் வெங்கடேசன், மாவட்ட பொருளாளா் ராஜ்மோகன், மாவட்ட பொதுச் செயலாளா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com