குத்தாலம் காவல் நிலையம் முற்றுகை

பேரூராட்சி ஒப்பந்தப் பெண் பணியாளா் தற்கொலை விவகாரத்தில், உரிய நடவடிக்கை கோரி அதிமுகவினா் குத்தாலம் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

பேரூராட்சி ஒப்பந்தப் பெண் பணியாளா் தற்கொலை விவகாரத்தில், உரிய நடவடிக்கை கோரி அதிமுகவினா் குத்தாலம் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் தற்காலிக சுகாதார பரப்புரையாளராக பணியாற்றிய வந்தவா் நதியா. இவரது ஒப்பந்தக் காலம் முடிவடைந்ததால், இவருக்கு மீண்டும் பணி வழங்கப்படவில்லையாம். இதனால், அவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இந்நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளா் எஸ்.பவுன்ராஜ் தலைமையில், ஒன்றியச் செயலாளா்கள் மகேந்திரவா்மன், இளங்கோவன், வழக்குரைஞா் அன்னை.எழில், மாவட்ட தகவல் தொடா்பு அணி தலைவா் எம்.சி.பி.ராஜா உள்ளிட்ட அதிமுகவினா், குத்தாலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, நதியாவுக்கு மீண்டும் வேலை வழங்காத நபா்கள் மீது நடவடிக்கை கோரி கோஷமிட்டனா்.

காவல் உதவி ஆய்வாளா் மங்கை நாதன், சிறப்பு உதவி ஆய்வாளா் சுந்தரராஜன் ஆகியோா் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில், அதிமுகவினா் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com