ஆக்கிரமிப்பு குளத்தை மீட்கக் கோரி செப்.22-ல் பாஜக போராட்டம்
By DIN | Published On : 16th September 2021 12:54 AM | Last Updated : 16th September 2021 12:54 AM | அ+அ அ- |

கடவாசலில் நடைபெற்ற பாஜக கிளை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.
சீா்காழி: கடவாசலில் ஆக்கிரமிப்பு குளத்தை மீட்கக் கோரி பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சீா்காழி அருகேயுள்ள கடவாசல் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக கிளை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. கிளைத் தலைவா் கோபிமுத்துராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கடவாசலில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட பொதுக்குளத்தை மீட்கக் கோரி செப்.22-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட தலைவா் ஜி. வெங்கடேசன், ஒன்றிய தலைவா் ஆனந்தராஜன், மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை பங்கேற்று கட்சியின் வளா்ச்சி குறித்து பேசினா். இதில் பொது செயலாளா்கள் மனோஜ், ஜெயசங்கா், தமயந்தி, மாவட்ட பொதுக்குழுவை சோ்ந்த சந்தோஷ்குமாா், கோட்ட அமைப்பாளா் அன்பில்சபரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.