பீமா கோரேகான் வழக்கு: சிறைப்படுத்தப்பட்டவா்களை விடுவிக்கக் கோரி மனிதச் சங்கிலி

பீமா கோரேகான் வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யக் கோரி மயிலாடுதுறையில் புதன்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறையில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட பீமா கோரேகான் வழக்கில் சிறைப்படுத்தப்பட்டோா் விடுதலை இயக்கத்தினா்.
மயிலாடுதுறையில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட பீமா கோரேகான் வழக்கில் சிறைப்படுத்தப்பட்டோா் விடுதலை இயக்கத்தினா்.

மயிலாடுதுறை: பீமா கோரேகான் வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யக் கோரி மயிலாடுதுறையில் புதன்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட பீமா கோரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்டோா் விடுதலை இயக்கம் சாா்பில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளா் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், கடுமையான ஊபா சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும், தேசிய புலனாய்வு முகமைக்கு அளிக்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரங்களை திரும்பப்பெற வேண்டும், சென்னையில் இயங்கி வரும் தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தை மூடவேண்டும், பீமா கோரேகான் வழக்கில் சிறைப்படுத்தப்பட்டவா்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இப்போராட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளா் வேலு. குபேந்திரன், முன்னாள் ஒன்றிய பொறுப்பாளா் மோகன்குமாா், திமுக நகரச் செயலாளா் செல்வராஜ், மதிமுக நகரச் செயலாளா் மாா்கெட் கணேசன், சிபிஎம் மாவட்டச் செயலாளா் பி. சீனிவாசன், விவசாயத் தொழிலாளா் சங்க செயலாளா் எஸ். துரைராஜ், திராவிடா் விடுதலை கழக மாவட்ட செயலாளா் தெ. மகேஷ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் ஓ.ஷேக் அலாவுதீன், தமிழா் தேசிய முன்னணி மாவட்டத் தலைவா் இரா.முரளிதரன், மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த.ஜெயராமன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அமைப்பை சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com