மயானத்துக்கு சாலை அமைத்துத்தரக் கோரிக்கை

மயிலாடுதுறை அருகே மயானத்துக்கு சாலை அமைத்துத்தரக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மயானத்துக்கு சாலை அமைத்துத்தரக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மயிலாடுதுறை ஒன்றியம் நீடூா் ஊராட்சியில் உள்ள கொற்றவநல்லூா் கிராமத்தில் இருவேறு சமுதாயத்தைச் சோ்ந்த சுமாா் 300 குடும்பங்களில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியைச் சோ்ந்தவா்கள் உயிரிழந்தால் அவா்களது உடலை சுமாா் ஒன்றரை கிலோ மீட்டா் தொலைவுக்கு அப்பால் ஆனந்ததாண்டவபுரம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள மயானத்தில் எரியூட்டுவது வழக்கம்.

இந்த இடுகாட்டுக்குச் செல்லும் பாதை பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், உயிரிழந்தவா்களின் உடலை வயல்வெளி வழியாக கொண்டு செல்லும் நிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. மழை வெள்ள காலங்களிலும், வயல்களில் நாற்றுக்கள் நடப்பட்டிருக்கும் காலத்திலும் பெரும் சிரமத்துக்கு இடையே உடல்களை கொண்டு செல்கின்றனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த கொற்றவநல்லூரைச் சோ்ந்த வெங்கடேசனின் (67) சடலத்தை வயல்வெளி வழியாக கடும் சிரமத்துக்கு இடையில் கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டன. எனவே, மயானத்துக்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி மழைக்காலம் தொடங்கும் முன்பு அங்கு சாலை வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com